1983 -ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில், பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியான மெகாஹிட் திரைப்படம் முந்தானை முடிச்சு.


இப்படத்தில் ஊர்வசி, K K சவுந்தர், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் வசூலில் வாரிக்குவித்தது மட்டுமில்லாமல், பாக்யராஜ் படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் என்கிற பெருமையையும் பெற்றது. முருங்கைக்காய்க்கு பெயர்போன இப்படம் தற்போது மீண்டும் இப்படத்தை ரீமேக் செய்ய முன்வந்துள்ளார் பாக்யராஜ், இதில் ஹீரோவாக அதாவது பாக்யராஜ் கதாப்பாத்திரத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் தற்போது, ஊர்வசி நடித்திருந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...