இந்திய சினிமாவில் குறிப்பிடும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய், தன்னுடைய 21 -வது வயதில் உலகழகி பட்டதை பெற்றவர்.


மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தனது கவர்ச்சி மிகுந்த கண்களுக்காகவே இவருக்கென்ன ரசிகர் கூட்டம் இன்றளவும் உள்ளது. திருமணத்திற்கு பிறகு படங்களை குறைத்து கொண்ட ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் இமைக்கா நொடிகள் ஹிந்தி ரீமேக் என வரிசைக்கட்டி நிற்கிறது படங்கள். இந்நிலையில் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போன்றே உருவத்திலும், கண்களுடன் இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ammuzz_amrutha என்கிற பெயரில் ஐஸ்வர்யா ராய் நடித்த படங்களின் பாடல்கள், வசனங்களை பேசி டிக் டாக்கில் போஸ்ட் செய்து வருகிறார்.
Video:
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…