கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கிய ஐஷ்வர்யா ராய்! வைரல் படங்கள்: கேன்ஸ் 2023 திரைப்பட விழாவில் வித்தியாசமான உடையில் தோன்றிய ஐஸ்வர்யா ராயின் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்தில் வருடாவருடம் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும். அந்த வகையில் 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. 27ஆம் தேதிவரை கோலாகலமாக நடக்கும் இந்த விழாவில் சர்வதேச திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் கலந்துகொள்வார்கள்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாச உடையில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த வருடமும் படு வித்தியாச உடையில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். கறுப்பு மற்றும் சில்வரால் ஆன கவுனில் அலுமினிய பெயில்லெட்டுகள் மற்று கிரிஸ்டல்களால் ஆன கூரை வடிவ ராட்சத சில்வர் ஹூட்டை வைத்து தலையை கவர் செய்யும் வகையில் இருந்தது. ஒரு பக்கம் ரசிக்கப்பட்டாலும், மறுபக்கம் நெட்டிசன்களுக்கு டிரோல் மெட்டீரியலாகவும் அமைந்துள்ளது. இதோ அந்த படங்கள்…








உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…