பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் அவர்களுக்கு ஜூலை 11 அன்று கொரோனா பாதிப்பு முதலில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சன், மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் இவர்களது மகள் ஆராத்யா பச்சன் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.


இதில் அமிதாப் மற்றும் அபிஷேக் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர், ஐஸ்வர்யா ராய் அவரது மகளுடன் வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் ஆகியோரது உடல்நிலை சரியாகி வருவதாக அவர்கள் குடும்ப தரப்பில் கூறப்படுகிறது, மேலும் சக நடிகர்கள் துவங்கி கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வரை விரைவில் குணமடையவேண்டும் என்கிற தங்களது வேண்டுதல்களை கூறிவருகின்றனர்.
ரசிகர்களை சூடேற்றும் நடிகை அமலா பால் லேட்டஸ்ட் படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…