அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்த பரபரப்பு தற்போது சூடுபிடித்துள்ளது, அனைத்து கட்சிகளும் அதற்குரிய போட்டிக்கு முனைப்புகாட்டி வருகிறது. இந்நிலையில் தற்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவியது. இன்று அறிவிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், அ.தி.மு.க. கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…