‘அடியே’ திரைப்பட விமர்சனம் | Adiyae Movie Review and Rating
படக்குழு:
நடிகர்கள்: ஜிவி பிரகாஷ், கௌரி கிஷான், வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் மற்றும் பலர்.
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு: கோகுல் பினாய்
எடிட்டிங்: முத்தையன்
தயாரிப்பு: Maali & Manvi Movie Makers
இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்.


கதைச்சுருக்கம்:
கதையின் நாயகன் ஜிவி பிரகாஷ் நாயகி கௌரி கிஷானை உருகி உருகி காதலித்து வருகிறார். எப்படியாவது தனது காதலை வெளிப்படுத்த வேண்டுமென துடித்து கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்ப்பாராத விபத்து ஒன்று சந்திக்கிறார். இதிலிருந்து மீண்டும் வந்த ஜிவி பிரகாஷ் சந்திக்கும் குழப்பங்கள், பிரச்சனைகள், காதல் என கற்பனையின் உச்சமே இப்படத்தின் முழுக்கதை.
FC விமர்சனம்:
‘திட்டம் இரண்டு’ பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கௌரி கிஷான், வெங்கட் பிரபு நடிப்பில் இன்று(ஆக.25) வெளியாகியிருக்கும் ‘அடியே’ படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை, நாயகன் ஜிவி பிரகாஷ் வழக்கமான அவர் படங்களில் எதிர்ப்பார்க்கும் அனைத்தையும் (உதட்டு முத்தம் உட்பட) குறையில்லாமல் செய்துள்ளார். நாயகி கௌரி கிஷான் தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து தேவையானவற்றை கொடுத்துள்ளார். இதுதவிர, வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் இருவரும் வரும் இடங்கள் சிறிது சிரிப்பை தருகிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் & பின்னணி இசை பெரிய பலமாக அமைந்துள்ளது.
ரொமான்டிக் டிராமாவை பாரலல் யுனிவர்ஸ் என ஃபேன்டசி கலந்து வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்துள்ளனர். அது சில இடங்களில் நன்றாகவே அமைந்துள்ளது. ஆனால் முதல் பாதியில் இருந்த அந்த திரைக்கதை சுவாரஸ்யம், இரண்டாம் பாதியில் துளியும் இல்லை, இரண்டாம் பாதியை ஜவ்வாக இழுத்து நம் பொறுமையை ரொம்பவே சோதித்துள்ளனர். பாரலல் யுனிவர்ஸ் என்பதை மக்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறேன் என நினைத்து திரைக்கதையை மொத்தமாக குழப்பியுள்ளனர். அவ்வபோது மாநாடு படத்தின் சில காட்சிகள் நம் கண்முன் வந்து செல்வதையும் நம்மால் தவிர்க்க முடியவில்லை. மொத்தமாக வித்தியாசமான சிந்தனை தான், ஆனால் அந்த ஃபேன்டசி அனுபவத்தை முழுமையாக தர முடியாமல் சூப்பரான முதல் பாதி, சொதப்பலான இரண்டாம் பாதி என அரை வேக்காட்டோடு வந்துள்ளது இந்த அடியே…
(அடல்ட் காட்சிகள் இருக்கிறதா? உதட்டு முத்த காட்சிகள் இருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கலாமா என யோசித்து முடிவெடுங்கள்…)
Adiyae Movie Film Crazy Media Rating: 2.5 /5
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண