சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்? எந்த படத்தில் தெரியுமா?
கங்குவா படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக மீண்டும் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இது இவர் இசையமைக்கும் 100வது படமாகும்.
இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி இப்படத்தின் கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரபல நடிகர் துல்கர் சல்மானும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சூர்யா தயாரிப்பில் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் அதிதி ஷங்கர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண