மாஸ்க் அணியாமல் சுற்றி திரிந்த அருவி பட நடிகை! அபராதம் விதித்த அதிகாரிகள்

0
Aditi Balan fined for not wearing Mask

‘அருவி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன், தனது முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்து, பாராட்டுகளையும் விருதுகளையும் அள்ளிக் குவித்தார். ஆனால், அதற்கு பிறகு எந்தவொரு படத்திலும் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இது ஒருபுறம் இருக்க, நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் நடிகை அதிதி பாலன் முகக்கவசம் இன்றி வெளியில் வந்ததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.200 அவருக்கு அபராதம் விதித்தனர். ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பிறகு அதிதி பாலன் ரூ.200 அபராதம் கட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Aditi Balan fined for not wearing Mask
Aditi Balan fined for not wearing Mask

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...