த்ரிஷா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்! வரிசை கட்டி நிற்கும் புது படங்கள்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா, இடையில் படங்கள் ஏதும் சரியாக அமையாமல் பின்தங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது மார்க்கெட்டில் விட்ட இடத்தை பிடித்துள்ளார்.
அதன்படி, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.


இதைத் தொடர்ந்து, த்ரிஷா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள, கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி ரோட்’ திரைப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘ஐடென்டிட்டி’ என்கிற படத்தில் த்ரிஷா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று(செப்.13) கோவாவில் துவங்கியுள்ளது.
கன்னடத்தில் ‘பிருந்தா’ என்கிற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவற்றை தொடர்ந்து த்ரிஷா அடுத்து நடிக்கவுள்ள திரைப்படங்கள்:


அஜித் & மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘KH 234’ படத்தின் கதாநாயகியாகவும் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் நடிகை த்ரிஷா…
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண