நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா பாதிப்பு!

0
Actress Trisha Testes Positive for Corona
Actress Trisha Testes Positive for Corona

நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக வலைத்தள பக்கத்தில் தெரவித்துள்ளார்.

Actress Trisha Testes Positive for Corona
Actress Trisha Testes Positive for Corona

இதுக்குறித்து அவர் கூறியுள்ளதாவது, “முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்தும் தற்போது எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நான் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியுள்ளதால் பெரியளவில் பாதிப்பில்லை. தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தயவு செய்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாஸ்க் அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள், நான் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்த, பிரார்த்தனை செய்த நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றி’ என கூறியுள்ளார்.

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்