கடந்த மார்ச் மாதம் துவங்கிய கொரோனா போராட்டம் இன்று வரை முடிந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, குறிப்பாக கேரளாவில் இரண்டாம் அலையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெப் சீரிஸ் ஒன்றிற்காக ஹைதரபாத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தமன்னாவிற்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட, ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…