கைக்கொடுத்த ‘காவாலா’ பாடல்! சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய தமன்னா:
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வந்த நடிகை தமன்னா, ஒருக்கட்டதில் படங்கள் பெரிதுமின்றி ஐட்டம் பாடலுக்கும், முகம் சுழிக்கும் வெப் தொடர்களிலும் நடிக்க துவங்கினார்.
இந்நிலையில் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் தமன்னா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் தமன்னாவின் அந்த டான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, தொடர்ந்து டிரன்டிங்கில் இருந்து வருகிறது.


இந்நிலையில் இப்பாடலின் மூலம் கிடைத்த வரவேற்பால் தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளார். பாலிவுட்டில் ‘வேதா’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இப்படத்தில் நடிக்க ரூபாய் 15 கோடி சம்பளம் கேட்க, தயாரிப்பு நிறுவனமும் கொடுக்க முன்வந்துள்ளது. இதன்மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத்தின் சம்பளத்தை தொட்டு விட்டார் தமன்னா…
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண