கன்னடம் மற்றும் பாலிவுட் திரையுலகில் சமீபகாலமாக போதைப்பொருள் என்கிற வார்த்தை புரட்டிப்போட்டு வருகிறது. கன்னடத்தில் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி, பாலிவுட்டில் ரியா என தொடர்ந்து நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுக்குறித்த விசாரணையும் சூடுப்பிடித்துள்ளது.


மேலும் முக்கிய நடிகர், நடிகைகள் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி இந்த பரபரப்பை அதிகரிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகள் அனைத்திலும் போதைப்பொருள் பயன்படுத்தப் படுவதாகவும், போதைப் பொருள் இல்லாத பார்ட்டிகளே இல்லை. மேலும் தெலுங்கு பிரபலங்களின் வாரிசு நடிகர்கள் நடத்தும் நடன பார்ட்டிகளிலும் போதைப் பொருள் உள்ளது என்றும் அது மட்டுமின்றி பல ஒழுக்கக் கேடான விஷயங்களும் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் மற்றும் நடிகைகளின் பெயரை தெரிவித்த தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...