சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ | Sneha #Workout Motivation

0
Actress Sneha Latest Viral Video

கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, இவரது சிரிப்பிற்காகவே தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகை புன்னகை இளவரசி சினேகா.

Actress Sneha Latest Viral Video
Sneha

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துக் கொண்டு பிசியாக இருந்த சினேகா, ஒரு கட்டத்தில் பிரசன்னாவுடன் திருமணம், குழந்தை என சினிமாவை விட்டு கொஞ்சம் விலகியிருந்தார். பிறகு உன் சமையலறையில், ஹரிதாஸ், வேலைக்காரன் மற்றும் சென்ற ஆண்டு வெளியான பட்டாஸ் உள்ளிட்ட சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சினேகாவிற்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் உற்சாகத்துடன் உடற்பயிற்சியை துவங்கிவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ” எனது உடற்பயிற்சியை துவங்கிவிட்டேன். நிச்சயமாக நாம் அனைவரும் கடினமான காலக்கட்டங்களில் இருக்கிறோம். எதிர்வரும் காலம் எப்படியிருந்தாலும் நாம் நம்மை ஆரோக்கியமாகவும் நேர்மறையாகவும் வைத்திருப்போம். இதுவும் கடந்து போகும்” என கூறியுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sneha Latest Instagram Video:

 

கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!

டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...