நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

0
Actress Samantha again admitted to the hospital
Actress Samantha again admitted to the hospital

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக வலம்வந்த நடிகை சமந்தாவிற்கு மிகவும் அரிதான மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இதனால் தான் மிகவும் கஷ்டப்பட்டதாவும், சிகிச்சைக்கு பிறகு தற்போது மெதுவாக குணமாகி வருவதாகவும் கூறியிருந்தார்.

Actress Samantha again admitted to the hospital
Actress Samantha again admitted to the hospital

இந்நிலையில் நேற்று திடீரென மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. எதனால் அனுமதிக்கப்பட்டார் என்கிற விவரம் இதுவரை தெரியவில்லை. சமந்தாவின் தரப்பிலோ, குறிப்பிட்டமருத்துவமனை தரப்பிலோ எந்தவொரு அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யசோதா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் உடல்நலக்குறைவால் சமந்தா கஷ்டப்படுவது தான் பெரும் சோகம்…

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here