பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி ஒரே படத்தில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் சாய் பல்லவியின் நடனத்திற்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தனுஷுடன் இவர் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் யூ டுயூப் தளத்தில் சாதனை படைத்து வருகிறது.


இந்நிலையில் சமீபத்தில் திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் சாய் பல்லவி. அவர் கூறியதாவது, “திருமணம் செய்து கொண்டால் பெற்றோரை பிரிந்து கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டி இருக்கும், அதனால் தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும், பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேன்” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...