பிரபல முன்னணி ஹீரோவுக்கு வில்லியாக கம்பேக் கொடுக்கும் ரோஜா!

0
Actress Roja to make a comeback with Allu Arjun's Pushpa

‘செம்பருத்தி’ என்கிற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரோஜா, முதல் படமே ஹிட் அடிக்க அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் குவிய துவங்கியது.

Actress Roja to make a comeback with Allu Arjun's Pushpa
Actress Roja

அர்ஜுன், ஹர்பஜன்சிங், லாஸ்லியா நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ முதல் பார்வை இதோ

அடுத்த 15 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்கள் என முன்னணி நடிகையாக வலம்வந்தார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரோஜா, அடுத்து அரசியல் பக்கம் திரும்பினார். 2014 முதல் ஆந்திராவின் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். 2014 தேர்தல் வெற்றிக்கு பிறகு 2019லும் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்படி அரசியல் பயணம் வெற்றிப்பாதையாக அமைய திரைத்துறையை விட்டு விலகினார்.

Actress Roja to make a comeback with Allu Arjun's Pushpa
Pushpa Movie Stills

தற்போது மீண்டும் திரைத்துறைக்கு கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் புஷ்பா, லாரி டிரைவராக சற்று வித்தியாச தோற்றத்தில் நடிக்கவுள்ள இப்படத்தில் நடிகை ரோஜா வில்லியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா ,மந்தனா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

 

கொள்ளை கொள்ளும் அழகில் ராஷ்மிகா மந்தனா! படங்களுடன்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...