மீண்டும் நாயகியான நடிகை மனிஷா யாதவ்!

0
Actress Manisha Yadav's New Film Announcement
Actress Manisha Yadav's New Film Announcement

வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை மனிஷா யாதவ். குறிப்பிட்ட காலத்தில் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது நினைவெல்லாம் நீயடா என்கிற படத்தின் மூலம் மீண்டும் நாயகியாக கேம்பேக் கொடுக்கவுள்ளார். இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 

Actress Manisha Yadav's New Film Announcement
Actress Manisha Yadav’s New Film Announcement

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இப்படத்தை சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கவுள்ளார். பிரஜன், மனிஷா யாதவ், ரோகித், யுவஸ், மனோபாலா, மதுமிதா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்