‘தங்கலான்’ படத்திற்காக கட்டுமஸ்தாக மாறிய நடிகை மாளவிகா மோகனன்: பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், பிறகு மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் தங்கலான் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துவரும் மாளவிகா, இப்படத்திற்காக சிலம்பம் உள்ளிட்ட சில பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து தற்போது படத்திற்கு தேவைப்படுவதால் உடல் எடையை குறைத்து ஒல்லியாக சைஸ் ஜீரோவுக்கு மாறியுள்ளார். இதுக்குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்கள்…




உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…