ஃபிட்னஸ் மீதும் அதீத கவனம் செலுத்தும் நடிகை மாளவிகா மோகனன்: பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், இதைத் தொடர்ந்து மாஸ்டர், மாறன் ஆகிய முன்னணி நடிகர்கள் மத்தியில் நடித்துள்ளார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் தங்கலான் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதுஒருபுறமிருக்க, தனது ஃபிட்னஸ் மீதும் அதீத கவனம் செலுத்த தொடங்கி பல ஒர்கவுட்டுகளை செய்து வருகிறார் மாளவிகா. இதுக்குறித்து அவர் கூறுகையில், “எளிமையான உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு டவல் அல்லது யோகா பாய் இருந்தால் போதும் என்றும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஒரு சில நிமிடங்களுக்கு இந்த உடற்பயிற்சியை செய்து நமது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம்” என கூறியுள்ளார். மேலும் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியும் வருகிறது.






உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…