வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கீர்த்தி ஷெட்டி!
தெலுங்கில் அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி, தற்போது தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ஜீனி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதுக்குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.


இதற்கிடையில் கீர்த்தி ஷெட்டிக்கு பிரபல ஹீரோவின் மகன் ஒருவர் தொல்லை கொடுப்பதாக செய்திகள் பரவ துவங்கியது. என்ன பிரச்சனை? யார் அந்த நடிகரின் மகன்? என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்ப்பட, இதுக்குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் கீர்த்தி ஷெட்டி.
அவர் கூறியுள்ளதாவது, “இது முற்றிலும் பொய்யான தகவல். இப்படி ஒரு செய்தியை முதலில் கண்டுகொள்ளாமல் தான் விட்டுவிட்டேன், ஆனால் இது எல்லைமீறி செல்கிறது” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண