ஆண் குழந்தைக்கு தாயான நடிகை இலியானா:
தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வந்த கதாநாயகி இலியானா, தமிழில் கேடி, விஜயுடன் நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக வலம்வந்த இவர், ஒருக்கட்டதில் படவாய்ப்புகள் இன்றி சோஷியல் மீடியாவே கதி என இருந்தார்.


அவ்வபோது ஏதேனும் கூறி சர்ச்சையில் சிக்கி வந்த இலியானா, திருமணத்திற்கு முன்னரே தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து வந்தார். இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் தனக்கு அழகிய ஆண் குழந்தையை பிறந்துள்ளதாகவும், குழந்தை பெயர் “Koa Phoenix Dolan” என வைத்துள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக பகிர்ந்துள்ளார். மேலும், அவரது குழந்தை தூங்குவது போல் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். (இதுவரை அவர் தனது காதலர் யார் என்பதை ரசிகர்களுக்கு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
இதையும் படிங்க 👉 “இப்படி பட்ட படங்கள் ஒரு நடிகனுக்கு கிடைப்பது பாக்கியம்” சீதா ராமம் குறித்து துல்கர்!
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண