நேற்று இரவு நண்பர்களுக்கு பார்டியளித்த சுஷாந்த்! இறுதி நிமிடங்கள்

0
actor Sushant Singh Rajput commits Suicide

பிரபல பாலிவுட் ஹீரோவான சுஷாந்த் சிங் ராஜ்புத், மகேந்திர சிங் தோனி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர்.

actor Sushant Singh Rajput commits Suicide

வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்த சுஷாந்த் இன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்று முழுதாக தெரியவில்லை, மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் சமீப நாட்களாக மன அழுத்தம் காரணமாக பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் என கூறுகின்றனர். இந்நிலையில் அவரது இறுதி நிமிடங்கள் குறித்த தகவல்கள் சில வெளியாகி யுள்ளது, அந்த வகையில் நேற்று இரவு தனது நெருக்கமான நண்பர்கள், உறவினர்களை அழைத்து பார்டி கொடுத்திருக்கிறார் சுஷாந்த். விடியற்காலை வரை சென்ற அந்த பார்டி, அதிகாலை 3 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது. சுஷாந்தும் தூங்க சென்றுள்ளார் அதுதான் அனைவரும் இறுதியாக அவரை பார்த்தது, அதன்பின் காலை அவர் வீட்டு வேலைக்காரர்கள் வீட்டை சுத்தம் செய்துள்ளனர். அவர் அறையை சுத்தம் செய்ய கதவை தட்டியுள்ளனர், கதவு திறக்கவில்லை. 

actor Sushant Singh Rajput commits Suicide

 இரவு பார்டி தாமதம் அதனால் அசந்து தூங்குகிறார் என நினைத்து அவர்கள் சென்றுவிட, மீண்டும் மதியம் சுஷாந்திற்கு போன் செய்துள்ளனர் “அவரது போன் சுவிட்ச் ஆப்” என வர மீண்டும் கதவை தட்டி பார்த்துள்ளனர். திறக்கவில்லை, பயந்துபோய் சுஷாந்தின் நண்பர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தால் சுஷாந்த் தூக்கிட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. உடனே போலீசிடம் தகவல்கள் சொல்ல, அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இவ்வாறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன, எல்லாம் முடிவெடுத்துவிட்டு தான் நண்பர்களுக்கு பார்டி கொடுத்தாரா? இல்லை? வேறு எதுவுமா? என்று வரும் போலீஸ் விசாரணையில் தெரியவர வாய்ப்புள்ளது.

 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டும் நடிகை ஷெரின்! வைரல் படங்கள்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...