‘தளபதி 66’ படத்தில் இணைந்த 12B நடிகர்! லேட்டஸ்ட் அப்டேட்

0
Actor Shaam joins Thalapathy 66
Actor Shaam joins Thalapathy 66

 

‘தளபதி 66’ படத்தில் இணைந்த 12B நடிகர்! லேட்டஸ்ட் அப்டேட்: நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ‘தளபதி 66’படத்தில் நடித்து வருகிறார்.

தில் ராஜு இயக்கும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் சரத்குமார் விஜயின் அப்பாவாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு இரண்டு அண்ணன்கள் இருப்பதாகவும், அதில் ஒரு அண்ணனாக ‘மைக்’ மோகனிடம் கேட்க அதைப்பற்றிய முடிவு இன்னும் வெளியாகவில்லை.

Actor Shaam joins Thalapathy 66
Actor Shaam joins Thalapathy 66

இந்நிலையில் தற்போது இன்னொரு அண்ணனாக நடிகர் ஷ்யாம் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் பிசியாக நடித்து வந்த ஷ்யாம் தற்போது எந்தவொரு வாய்ப்புமே இல்லாமல் இருந்து வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் மீண்டும் கேரக்டர் நடிகராக வலம்வர வாய்ப்புள்ளது.

ஏற்கனவே குஷி படத்தில் விஜய்க்கு நண்பனாக ஒருசில காட்சிகளில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்