நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன் நடிக்கும் ‘ஹரா’!

0
Actor Mohan Starring New Movie Hara
Actor Mohan Starring New Movie Hara

நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன் நடிக்கும் ‘ஹரா’! டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தொடர் வெற்றிகளால் வெள்ளி விழா நாயகன் என அறியப்பட்டவர் நடிகர் மோகன். இவருக்கு ‘மைக் மோகன்’ என செல்ல பெயரும் உண்டு. இப்படி கொடிகட்டிப் பறந்த மோகன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் என்ன காரணமோ தெரியவில்லை சினிமாவை விட்டு மறைந்து போனார், ஆனாலும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்கிற குறிக்கோளில் இருந்து வந்த மோகன் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

Actor Mohan Starring New Movie Hara
Actor Mohan Starring New Movie Hara

‘தாதா 87’, PUPG & பவுடர் ஆகிய படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘ஹரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான லுக்கில் இருக்கும் மோகனின் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்