நடிகர் மாரிமுத்து (57) மாரடைப்பால் காலமானார்:
நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ‘எதிர்நீச்சல்’ என்கிற ஒருதொடர் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் மாரிமுத்து.


இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பேசிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து
(57) திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த சூர்யா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வருசநாடு பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளது
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண