நடிகர்/இயக்குனர் மனோபாலா உடல்நல குறைவால் காலமானார்: பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா இன்று காலமானார், அவருக்கு வயது (69). ஆகாய கங்கை, ஊர்க்காவலன், மல்லுவேட்டி மைனர், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள மனோபாலா, கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.


வெகுநாட்களாக அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது, இதற்கான சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…