தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம், இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளம் நம் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான்.
ரோஜா படத்தின் அறிமுகமான ரஹ்மான் பின் அவர் கண்டது எல்லாமே வெற்றிப்படிகள் தான், தான் இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருதுடன் துவங்கிய இவர் ஆஸ்கர் வரை சென்று தமிழராக நமக்கு பெருமை சேர்த்தார். சினிமாவை தவிர்த்து மனிதாராகவும் எந்தவித கெட்ட பெயரும், சண்டை சச்சரவும் இல்லாத ஒரு மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படி இருந்தும் “எனக்கு வரும் படங்களை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு கூட்டமே பாலிவுட்டில் செயல்படுகிறது” என சமீபத்தில் இவர் கூறியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது, “பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன். தில் பெச்சாரா படத்திற்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன்.
அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள். அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…