மாணவர்களுக்கு புதிய கல்வி முறை! முழுவிவரம் இதோ

0
A new education system for students! Here are the full details
A new education system for students! Here are the full details

மாணவர்களுக்கு புதிய கல்வி முறை! முழுவிவரம் இதோ:

புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில், 2024 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய அரசு கல்வி வாரியங்களில் படிக்கும் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கவுள்ளதாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் தகவல். மேலும்,  இருமுறை நடத்தப்படும் தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுபோல, 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் 2 மொழிப் பாடங்களும், 9, 10ஆம் வகுப்பு மாணவர்கள் 3 மொழிப் பாடங்கள் பயில்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBEசேனலை காண