நடிகை சமந்தாவிற்கு தனது வீட்டிலே கோவில் கட்டும் முரட்டு ரசிகர்: தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா, தற்போது ஹிந்தி படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
உடல்நல குறைவால் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட சமந்தா தற்போது மீண்டும் பிஸியான நடிகையாகியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஷாகுந்தலம் படம் சுமாராக இருந்தாலும் சமந்தாவின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் சமந்தாவின் நடிப்பின் மீது ஈர்ப்புக்கொண்ட ஆந்திராவை சேர்ந்த சந்தீப் எனும் ரசிகர் அவரது வீட்டிலேயே சமந்தாவிற்கு கோவில் கட்டு வருகிறாராம். இதுக்குறித்து அவர் கூறுவதாவது, “சமந்தா, பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன்” என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…