’83’ திரைப்பட விமர்சனம் | 83 Movie Review and Rating

0
83 Movie Review and Rating
83 Movie Review and Rating

83 திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள்: ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஜீவா, பங்கஜ் திரிபாதி, தாகிர் ராஜ் பாஸின் மற்றும் பலர்.

இசை: பாடல்கள்: ப்ரீதம்
பின்னணி இசை: ஜூலியஸ் பாக்கியம்

ஒளிப்பதிவு: ஆசிம் மிஸ்ரா

எடிட்டிங்: நிதின் பைடு

தயாரிப்பு: ரிலைன்ஸ் என்டர்டெயின்மென்ட், பாண்டோம் பிலிம்ஸ், விப்ரி மீடியா, KA ப்ரொடக்ஷன்ஸ்

இயக்கம்: கபீர் கான்.

83 Movie Review and Rating
83 Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

இந்தியாவின் பிரபலமான விளையாட்டு என்றால் பெரும்பாலும் நம்கண் முன் வருவது கிரிக்கெட் தான், அப்படிப்பட்ட கிரிக்கெட்டில் நம் இந்தியா இரண்டு முறை உலகக்கோப்பை வென்றுள்ளது. முதல் உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது, ஆனால் அந்த போட்டியில் வெற்றிபெற எந்தளவு கஷ்டங்களையும், அவமானங்களையும் அப்போது இருந்த இந்திய அணி எப்படி சந்தித்தது? பிறகு அதை கடந்து எப்படி ஜெய்த்தது? என்பதை மிக நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறது இந்த 83.

83 Movie Review and Rating
83 Movie Review and Rating

FC விமர்சனம்: 

மேலே கூறியது போல கிட்டத்தட்ட 38 வருடங்களுக்கு முன் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தனது வெற்றிச் சின்னத்தை பதித்த நேரமது, அப்போதிருந்த இந்திய அணி, அவர்களுக்கு கிடைத்த மரியாதை, அவமானங்கள், ஏற்ற இறக்கங்கள் என பெரும்பாலான விஷயங்களை நம் கண்முன் இப்படம் கொண்டு வந்திருக்கிறது. அதற்காகவே, படக்குழுவினற்கு பெரிய பாராட்டுக்கள். சரி விமர்சனத்திற்கு செல்வோம், முதலில் நடிகர்கள் கபில் தேவாக ரன்வீர் சிங், ஸ்ரீகாந்தாக ஜீவா என அனைத்து நடிகர்களின் தேர்வும் சிறப்பாக அமைந்துள்ளது, அவர்களும் அதை மிக சிறப்பாக செய்துள்ளனர். ரன்வீர் சிங் கபில் தேவாகவே வாழ்ந்துள்ளார். இப்படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்வது என்பது கடினம், அதன்பிறகு கிரிக்கெட் பயிற்சி, அதுவும் அப்போதிருந்த வீரர்கள் எப்படி விளையாடுவார்களோ அப்படி ஆட வேண்டும்? என பல சவால்கள் அனைத்திலும் தங்களது கடின உழைப்பால் சரியாக செய்து காட்டியுள்ளது படக்குழு.

நேர்த்தியான ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு மற்றொரு பலமாக அமைந்துள்ளது. படத்திற்கேற்ற பின்னணி இசை பல இடங்களில் புத்துணர்வை தருகிறது. இப்படத்தில் முக்கியமாக பாராட்ட வேண்டியது வசனங்களும், அந்த காலக்கட்டத்தில் நடந்த சில முக்கிய சம்பவங்களை படத்தின் இடையில் வைத்து மேலும் ஆழமாக பதியவைத்துள்ளனர். உதாரணமாக பூலாந்தேவி குறித்த காட்சி, மாருதி கார் அறிமுகமாகும் காட்சி என அந்த நேரத்தில் நடந்த முக்கிய விஷயங்களை இப்படத்தில் காட்சிகளாக வைத்துள்ளனர்.

83 Movie Review and Rating
83 Movie Review and Rating

இப்படத்தின் கதை நமக்கெல்லாம் தெரிந்திருந்தாலும், திரைக்கதையால் அதை மறக்க செய்து கிரிக்கெட் போட்டிகளின் போது உண்மையான பதற்றத்தை நமக்குள் சேர்த்தது இப்படத்தின் வெற்றி என சொல்லலாம். மேலும் இது ஒரு ஹிந்தி படம் அதை தமிழில் மொக்கையான வசனங்களை புகுத்தி, பேருக்கு டப்பிங் என செய்யாமல் மெய்சிலிர்க்கும் வசனங்களுடன், சரியான டப்பிங் கலைங்கர்களை சேர்த்து இப்படத்தை தமிழில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை பொறுத்தவரை குறையாக சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. நாம் அனைவரும் மகிழ்ந்த அந்த தருணத்தை மீண்டும் அதே உணர்ச்சிகளுடன் படமாக கொடுத்துள்ளனர். இறுதியாக கண்டிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் கண்டுகளிக்க கூடிய ஒரு சிறந்த திரைப்படமாக வெளியாகியுள்ளது இந்த 83.

  83 Movie FC Rating – 4 /5  

மேலும் உங்களுக்கு: ‘ராக்கி’ திரைப்பட விமர்சனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here